/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தொடர் வெடிச்சத்தம் காரணம் தெரியாது மக்கள் அச்சம்
/
தொடர் வெடிச்சத்தம் காரணம் தெரியாது மக்கள் அச்சம்
ADDED : செப் 03, 2024 04:50 AM

வேடசந்துார்: திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக பலமான, கட்டடங்கள் அதிரும் வண்ணம் கேட்கும் வெடச்சத்தம் தற்போது அடுத்தடுத்து தொடரும் நிலையில் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் இதற்கான விளக்கம் தராததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
மாவட்டத்தின் வடகோடியில் உள்ள கல்வார்பட்டி ஊராட்சியை யொட்டி கரூர் மாவட்ட பகுதியில் ரங்கமலை,மேற்குத் தொடர்ச்சி மலை உள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பு இப் பகுதியில் பலமான வெடிச்சத்தம் கேட்கும். இதே சத்தம் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ,கரூர் பகுதி மட்டுமின்றி வேடசந்துரர், குஜிலியம்பாறை தாலுகா பகுதிகளிலும் கேட்டது.
என்ன சத்தம் எங்கிருந்து வருகிறது என்பதை அறிய முடியாமல் வேடசந்துார் பகுதி வருவாய் துறையினர் கரூர் மாவட்ட எல்லையோரம் வரை சென்று திரும்பினர். எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
கொரோனா காலத்தில் வெடிச்சத்தம் இல்லாமல் இருந்த நிலையில் அதன்பின் குஜிலியம்பாறை, வேடசந்துார், வடமதுரை, நத்தம், திண்டுக்கல் ,ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த வெடி சத்தம் மீண்டும் கேட்கிறது. வீடுகளே அதிரும் வண்ணம் கேட்கும் இந்த சத்தத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இச்சத்தம் எங்கிருந்து வருகிறது என்பது இன்றைய தேதி யாருக்கும் தெரியவில்லை. ஆண்டுக்கணக்கில் அவ்வப்போது தொடரும் இந்த சத்தம் இரு மாவட்ட மக்களிடையே அச்ச நிலையை ஏற்படுத்துகிறது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் எந்தஒரு விளக்கமும் இது வரை தெரியப்படுத்தவில்லை .எதையும் கண்டுக்காத மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையால் மக்களும் அதிருப்தியில் உள்ளனர்.
..........
எந்த தகவலும் இல்லை.
ரங்கமலை பகுதியில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசு சார்பில் பாறையின் கடினத்தன்மையை ஆய்வு செய்வதாக கூறி விவசாய நிலங்களில் கற்களை நட்டனர். அப்போதே இந்த வெடி சத்தமும் கேட்க துவங்கியது. விவசாயிகளை ஒருங்கிணைத்து நட்ட கற்களை பிடுங்கிவிட்டு 300க்கும் மேற்பட்டோர் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தோம். இருந்தும் வெடி சத்தம் மட்டும் தொடர்கிறது. திண்டுக்கல்லில் நடந்த விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் கேட்டேன். மாவட்ட நிர்வாகமோ புள்ளியல் துறை மூலம் விசாரித்து தகவல் சொல்கிறோம் என்றனர். இன்று வரை எந்த தகவலும் இல்லை. இனியாவது இது தொடர்பாக தகவலை தெரிவிக்க வேண்டும்.
டி.ராமசாமி, குடகனாறு பாதுகாப்பு சங்க தலைவர், வேடசந்துார்.
...........