/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கந்து வட்டி தொழில் அதிகரிப்பு; மக்கள் பாதிப்பு
/
கந்து வட்டி தொழில் அதிகரிப்பு; மக்கள் பாதிப்பு
ADDED : ஜூலை 15, 2024 04:37 AM

மாவட்டத்தில் நாளுக்கு நாள் கந்து வட்டி தொழில் அதிகரித்து மக்கள் பலர் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. இதை பலர் தொழிலாக செய்கின்றனர். கொடுக்கும் பணத்துக்கு குறிப்பிட்ட சதவீதம் வட்டியை நிர்ணயித்து வாங்குகின்றனர். 2-3 சதவீதம் வட்டி விகிதத்தில் பணம் தேவைப்படுவோருக்கு கடன் கொடுக்கின்றனர். சிலர் 10 சதவீத வட்டிக்கு கடன் கொடுக்கின்றனர்.
ரூ.10 ஆயிரம் கடன் கொடுத்தால், அதில் ஆயிரம் ரூபாயை பிடித்துக் கொண்டு ரூ.9 ஆயிரம் வழங்குவர். தினமும் ரூ.100 வீதமோ, வாரம் ஆயிரம் ரூபாய் வீதமோ திருப்பி செலுத்த வேண்டும். ஒரு தவணை செலுத்த முடியாமல் போனால், அதற்கும் குறிப்பிட்ட சதவீதம் வட்டி செலுத்த வேண்டும்.
இதில் மணிநேர வட்டி, மீட்டர் வட்டி, ஜெட் வட்டி என்ற பலவகை வட்டி இதில் அடங்கும்.இவற்றால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில்,தமிழ்நாடு அதீத வட்டி வசூல் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. மக்களுக்கான பணத்தேவை அதிகரித்து வருவது கந்து வட்டி தொழில் வளர்ச்சி அடையவே செய்கிறது. குறிப்பாக கிராமப்புறங்கள்,புறநகர் பகுதிகளில் பணப்புழக்கம் குறைவான இடங்களில், ஏழை மக்களை குறிவைத்து நடத்தப்படுகிறது. கந்து வட்டி தொழில் செய்பவர்களை தீவிரமாக கண்காணித்து அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.