/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பச்சிளம் குழந்தையை வீசி சென்ற கல் நெஞ்ச தாய்; திண்டுக்கல்லில் கொடூரம்

ADDED : நவ 21, 2024 07:58 AM

திண்டுக்கல்: திண்டுக்கல், நத்தம்ரோடு, குடகனாறு விருந்தினர் இல்லத்திலிருந்து ரயில்வே குட்செட் செல்லும் வழியில் உள்ள அந்தோணியார் கோவில் வாசலில் துணியில் சுற்றப்பட்டு பிறந்த குழந்தை கிடப்பதாக, இரவு ரோந்து பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து அங்கு சென்ற போலீசார் குழந்தையை மீட்டனர்.
உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு குழந்தைக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவ வார்டு பிரிவில் உள்ள ஐ.சி.யு வில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த குழந்தையை வீசியது யார்?, அந்த குழந்தையின் பெற்றோர் யார்?, தவறான உறவால் பிறந்த குழந்தை என்பதால் இவ்வாறு வீசினார்களா? என்பது குறித்து திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.