ADDED : அக் 23, 2024 04:35 AM

வடமதுரை : ரேஷன் கடை விற்பனையாளர்களிடம் இரு மடங்கு அபராதம் வசூலிப்பதை கைவிட வேண்டும், ரேஷன் கடைகளில் கட்டுப்பாடற்ற மளிகை பொருட்களை அதிக அளவில் சப்ளை செய்வதை நிறுத்த வேண்டும்,
விற்பனையாளர்களை ஒன்றிய பகுதிக்குள் 10 கி.மீ., துாரத்திற்குள் பணியமர்த்த வேண்டும் என 3 கோரிக்கைகளை வலியுறுத்தி வடமதுரையில் கூட்டுறவு சங்க பணியாளர்கள் நேற்று முன்தினம் முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சமாதான பேச்சு நடக்காததால் 2ம் நாளாக நேற்றும் ஒன்றிய பகுதிகளை சார்ந்த கூட்டுறவு சங்க நிர்வாகிகள், ரேஷன் கடை ஊழியர்கள் பணிக்கு செல்லாமல் வடமதுரையில் ஒன்று கூடி வேலை நிறுத்தத்தை தொடர்ந்தனர். ஒன்றிய தலைவர் பாலகுருசாமி தலைமை வகித்தார். செயலாளர் பி.ஏ.முருகேசன் முன்னிலை வகித்தார். பொருளாளர் சுப்பிரமணி, துணைத்தலைவர்கள் வடிவேல், தங்கவேல், இணை செயலாளர்கள் பூமிக்கண்ணு, பெருமாள் பங்கேற்றனர்.

