/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சின்ன வெங்காயம் வரத்து அதிகம்,விலை குறைவு
/
சின்ன வெங்காயம் வரத்து அதிகம்,விலை குறைவு
ADDED : அக் 25, 2024 04:11 PM

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வரத்து அதிகரித்ததால் சின்ன வெங்காயம் ரூ.30க்கு விலை குறைந்து விற்பனையாவது மட்டுமின்றி டன் கணக்கில் தேக்கமும் அடைகிறது.
திண்டுக்கல் மீனாட்சிநாயக்கன்பட்டி அருகே உள்ள வெங்காயப்பேட்டைக்கு வெளி மாநிலம்,மாவட்டங்களிலிருந்து தினமும் டன் கணக்கில் பெரிய வெங்காயம்,சின்ன வெங்காயம் திண்டுக்கல் மாவட்டத்தை சுற்றியுள்ள மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்படுகிறது. தற்போது தமிழகத்தில் கோவை,திருப்பூர்,நாமக்கல்,தேனி,தாராபுரம் போன்ற பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்யதொடங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் சின்ன வெங்காயத்தின் உற்பத்தியும் அதிகளவில் உள்ளது.
இதனால் தினமும் திண்டுக்கல் வெங்காயப்பேட்டைக்கு 400 டன் அளவிற்கு சின்ன வெங்காயம் வருகிறது. வரத்து அதிகமானதால் முதல் தர சின்ன வெங்காயத்தின் விலை குறைந்து 10 நாட்களாக ரூ.70க்கும்,2ம் தரம் சின்ன வெங்காயத்தின் விலை ரூ.30க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதமட்டுமில்லாமல் டன் கணக்கில் வரும் இவைகள் முழுமையாக விற்பனையாகாமல் வெங்காய கோடவுன்களிலேயே தேக்கமடையவும் தொடங்கியுள்ளது. தொடர்ந்து மழையும் பெய்வதால் எப்போது விற்பனையாகும் என வியாபாரிகள் ஏக்கத்தோடு காத்திருக்கின்றனர்.

