/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திருட வந்து மாடியில் துாங்கிய திருடன்
/
திருட வந்து மாடியில் துாங்கிய திருடன்
ADDED : ஜூலை 29, 2025 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: வேடசந்துார் கடைவீதியில் இரவு நேரத்தில் இரு வட மாநில வாலிபர்கள் போதையில் இங்கும், அங்கும் நடந்துள்ளனர். இதை யாரும் கண்டுகொள்ள வில்லை.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பஷீர் தனது வீட்டின் மொட்டை மாடிக்கு நேற்று காலை 8:00 மணிக்கு சென்றுள்ளார். அங்கு வட மாநில வாலிபர் நன்கு துாங்கி கொண்டு இருந்துள்ளார்.
அவரை எழுப்பிய போது நிதானமின்ற மது போதையில் உளறினார். உடன் வந்த மற்றொருவரை காணவில்லை.
திருட வந்த இடத்தில் போதையில் துாங்கி விட்டது தெரியவந்தது. இவரை வேடசந்துார் போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரித்தனர்.