/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அங்கன்வாடிக்கு நீங்கிய அச்சுறுத்தல்
/
அங்கன்வாடிக்கு நீங்கிய அச்சுறுத்தல்
ADDED : அக் 21, 2024 05:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: அய்யலுார் பேரூராட்சி பழைய அய்யலுாரில் கெங்கையூர் பகுதிக்கான அங்கன்வாடி மைய கட்டடம் உள்ளது.
இக்கட்டடத்தையொட்டிய பகுதியை அதே பகுதியை சேர்ந்த ஒருவர் ஆக்கிரமித்து மாட்டுத்தொழுவம் அமைத்திருந்தார். இதனால் விஷ பூச்சிகள் எளிதாக மையத்திற்குள் புகும் ஆபத்தும், அதிகளவில் உற்பத்தியாகும் ஈக்களும் குழந்தைகள் நலனை பாதிக்கும் ஆபத்தாக இருந்தது. இதுபற்றி தினமலர் நாளிதழில் 'இன் பாக்ஸ்' பகுதியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக அங்கு ஆய்வு நடத்திய அதிகாரிகள் அங்கன்வாடி கட்டடத்தையொட்டி ஏற்பட்டிருந்த ஆக்கிரமிப்பை அகற்றினர்.

