நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: தமிழக தமிழாசிரியர் கழகம் சார்பில் பணி நிறைவு, பதவி உயர்வு, விருதுகள் பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது.
திண்டுக்கல்லில் தனியார் மஹாலில் நடந்த விழாவிற்கு மாவட்டத்தலைவர் கவிஞர் விகுரா தலைமை வகித்தார். மூத்த தமிழறிஞர் துரை தில்லான், மாவட்ட செயலாளர் வீரமணி முன்னிலை வகித்தனர்.
எம்.எல்.ஏ., செந்தில்குமார், மெர்சி பவுண்டேசன் நிறுவனர் மெர்சி, மூத்த தமிழாசிரியர் காசிராசன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு, ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கினர்.
இதில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து வந்திருந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

