UPDATED : நவ 10, 2026 09:09 PM
ADDED : நவ 10, 2026 09:07 PM
அ நிறம் | அளவு
நிலக்கோட்டை: நிலக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியின் 75ம் ஆண்டு பவள விழா, ஆண்டு விழா, விளையாட்டு விழா என முப்பெரும் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் ஜெஸி ரோஸ்லின் தலைமை வகித்தார். கண்ணன் ஐ.ஏ.எஸ்., நிலக்கோட்டை எம்.எல்.ஏ., அய்யனார், மாவட்ட பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் செல்வராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் அழகுராஜ் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முன்னாள் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர். முன்னதாக ஒன்றிய அளவில் அறிவியல் கண்காட்சி நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.
