தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ டிட்டோ - ஜாக் ஆர்ப்பாட்டம்

டிட்டோ - ஜாக் ஆர்ப்பாட்டம்

டிட்டோ - ஜாக் ஆர்ப்பாட்டம்


UPDATED : ஆக 20, 2026 08:39 PM

ADDED : ஆக 20, 2026 08:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 20, 2026 08:39 PM ADDED : ஆக 20, 2026 08:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோ - ஜாக்) சார்பில் திண்டுக்கல் வட்டார கல்வி அலுவலகம் முன் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

வட்டார தலைவர்கள் தலைமை வகித்தனர். தமிழக ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயலாளர் பெரியசாமி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயலாளர் அமலசுந்தரராஜ் முன்னிலை வகித்தனர். டிட்டோ ஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் வின்சென்ட்பால்ராஜ் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 40 சதவீதம் என நிர்ணயம் செய்ய வேண்டும், உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை பழைய நடைமுறைப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

கூட்டு நடவடிக்கைக்குழுவின் ஆசிரிய, ஆசிரியைகள் திரளாக பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us