UPDATED : ஆக 20, 2026 10:08 PM
ADDED : ஆக 20, 2026 08:10 PM
அ நிறம் | அளவு
செம்பட்டி:ஆத்துார் ஒன்றிய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஒன்றிய மாநாடு செம்பட்டியில் நடந்தது. நிர்வாகி போர்ஜியா லிசியா மேரி தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் பாலாஜி துவக்கி வைத்தார். மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் சூசைமேரி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
விபி ஜி ராம்ஜி சட்டத்தை ரத்து செய்தல், தேசிய வேலை உறுதி திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல், 200 நாட்கள் வேலை, 700 ரூபாய் தினக்கூலி உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
புதிய நிர்வாகிகளாக ஒன்றிய தலைவர் முத்துமாரி, செயலாளர் சுரேஷ், பொருளாளர் சதீஷ்ராயப்பன் உள்ளிட்டோர் தேர்வாகினர்.
