/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி பங்குனி உத்திர திருவிழாவில் இன்று திருக்கல்யாணம், வெள்ளித்தேர் நாளை தேரோட்டம்

ADDED : ஏப் 10, 2025 01:42 AM
பழநி:பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி இன்று திருஆவினன்குடி கோயிலில் திருக்கல்யாணம், வெள்ளித் தேர், நாளை தேரோட்டம் நடக்கிறது .
பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திருஆவினன்குடி கோயிலில் ஏப்.,5 ல் கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர திருவிழா துவங்கியது. சுவாமிகளுக்கு காப்பும் கட்டப்பட்டது.
விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. பக்தர்களும் பல்வேறு பகுதிகளிலிருந்து கொடுமுடி சென்று தீர்த்த காவடிகள் எடுத்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து இன்று மாலை 5:30 மணிக்கு விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது. இதன்பின் இரவு 8:30 மணிக்கு சன்னதி வீதி, கிரி வீதிகளில் வெள்ளித் தேரோட்டம் நடைபெறுகிறது. நாளை (ஏப்.,11) மதியம் சுவாமி தேரில் எழுந்தருள மாலை 4:30 மணிக்கு தேரோட்டம், ஏப்.,14 மாலை தெப்பத் தேர் திருவிழா நடக்கிறது. அன்று இரவு கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவடைகிறது.