/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மனைவியை துாக்கிக்கொண்டு கணவன் செல்லும் வினோத போட்டி மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த வெற்றி ஜோடி

ADDED : ஜன 16, 2025 05:48 AM

வேடசந்துார்: வேடசந்தூர் சந்தைப்பேட்டையில் நடந்த  பொங்கல் விழாவில்  கணவன் தன் மனைவியை துாக்கிக்கொண்டு வெகு நேரம் நடந்து செல்லும் வினோத  போட்டியில்  வெற்றி பெற்ற ஜோடி துள்ளி குதித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.  பொதுமக்களும்  கை கொடுத்து பாராட்டினர்.
வேடசந்துார் சந்தைப்பேட்டையில்    ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருவிழா  விமர்சையாக நடைபெறும்.  பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல்,  கயிறு இழுத்தல், சைக்கிள் ஸ்லோ ரேஸ்  , பானை உடைத்தல்  உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்ற நிலையில்     கணவன் தனது மனைவியை  துாக்கிக்கொண்டு கீழே இறக்கி விடாமல் எல்லைக்கோட்டை தொட்டு வரும் வினோத போட்டியும் இதில் இடம் பிடித்தது.
யார் தனது மனைவியை கடைசி வரை கீழே இறக்கி விடாமல்  துாக்கிக்கொண்டு வருவோரே  வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.
மதன்குமார் - கங்கா, பூபதி ராஜா- குங்குமம், பரத் -தீபிகா, ராஜேஷ்குமார் - தீபா,   ராஜசேகர்- மனிஷா, அஜித்- ரேவதி, ரஞ்சித்- வினிதா  என  7  தம்பதியினர் பங்கேற்ற இதில்  பெயிண்டிங் கான்ட்ராக்டர்  ரஞ்சித் 32,- வினிதா 25 , தம்பதியினர் வெற்றி பெற்றனர்.
துள்ளி குதித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட இந்த ஜோடியை   பொதுமக்களும் ஆரவாரத்துடன் பாராட்டி மகிழ்ந்தனர்.