தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ரயில்களில் திருட்டு பெருமளவு குறைந்துள்ளது: டி.ஜ.ஜி., தகவல்

ரயில்களில் திருட்டு பெருமளவு குறைந்துள்ளது: டி.ஜ.ஜி., தகவல்

ரயில்களில் திருட்டு பெருமளவு குறைந்துள்ளது: டி.ஜ.ஜி., தகவல்


ADDED : அக் 23, 2026 08:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 23, 2026 08:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: ‘ரயில்களில் அலைபேசி திருட்டுக்கள் பெருமளவு குறைந்துள்ளது’ என தென்மண்டல ரயில்வே பாதுகாப்புப் படை டி.ஐ.ஜி., இப்ராஹிம் செரீப் தெரிவித்தார்.

திண்டுக்கல் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸ் ஸ்டேஷனில் டி.ஐ.ஜி., இப்ராஹிம் செரீப் இன்று (அக்.,23) ஆய்வு செய்தார். பின்னர் ரயில்வே பாதுகாப்புப் படையில் பணியாற்றும் போலீசாருக்கான குறைதீர் கூட்டத்தில் பங்கேற்று குறைகள், தேவைகளை கேட்டறிந்தார்.

தொடர்ந்து ரயில்வே ஸ்டேஷன் நடைமேடை, கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளை பார்வையிட்ட அவர் கூறியதாவது:

ரயில்களில் அலைபேசி திருட்டுக்கள் பெருமளவு குறைந்துள்ளன. கடந்த 3 மாதங்களில் மட்டும் ரயில்கள், ரயில்வே ஸ்டேஷன்களில் திருடு போன 300 அலைபேசிகளை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.

குற்றங்களை குறைக்க ரயில்வே ஸ்டேஷன்களில் போலீசாரின் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. போலீசாரின் சீரூடைகளில் பொருத்தப்படும் கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறியும் வகையில் கூடுதலான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

ரயில்வே பாதுகாப்புப் படை இன்ஸ்பெக்டர் பூமிநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us