UPDATED : அக் 23, 2026 08:32 PM
ADDED : அக் 23, 2026 08:28 PM
அ நிறம் | அளவு
கோபால்பட்டி: கோபால்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய், கொப்பரை, தேங்காய் தொட்டிக்கான மறைமுக ஏலம் நடந்தது. சுற்றுவட்டார விவசாயிகள், உள்ளூர், வெளி மாவட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
தேங்காய் பருப்பின் தரத்திற்கேற்ப கிலோ அதிகபட்சமாக ரூ.149-க்கும் குறைந்தபட்சமாக ரூ.140-க்கும் ஏலம் போனது. மொத்தம் 187 கிலோ கொப்பரை ரூ.27 ஆயிரத்துக்கு 863 ஏலம் போனது. மேற்பார்வையாளர் முகமது யாசின், மண்டி ஆய்வாளர் ராவணேஸ்வரன் உடன் இருந்தனர்.
