சாமிநாதபுரம்: பழநி ஜீ.வி.ஜீ நகர் பகுதியில் மில் தொழிலாளி தர்மராஜ் 55, மனைவி விஜயலட்சுமி 48 வசிக்கின்றனர். கணவர் வேலைக்கு சென்ற நிலையில் மனைவி அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. சாமிநாதபுரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் 20 பவுன் நகை திருடு போனது தெரிந்தது. மோப்பநாய்,தடயவியல் துறையினர் ஆய்வு செய்தனர். சாமிநாதபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
மகளை கடித்த தந்தை
வேடசந்துார்: சாலையூர் நால்ரோட்டை சேர்ந்தவர் மூட்டை துாக்கும் தொழிலாளி அழகுமலை 40. கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி தனலட்சுமி , மூன்று பிள்ளைகள் தனியாக வசித்து வருகின்றனர். நேற்று மாலை மனைவியின் வீட்டிற்கு குடிபோதையில் சென்ற அழகுமலை, தகராறில் ஈடுபட்டுள்ளார். மகள் தட்டி கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த அழகுமலை மகளின் கையை பிடித்து கடித்து விட்டு தப்பினார். மகள் வேடசந்துார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.