ADDED : நவ 02, 2024 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை,: அரசு சமுதாயக்கூடத்தில் வைத்திருந்த 700 கிலோ மக்காச்சோளத்தை திருடியவர்களை போலீசார் தேடுகின்றனர்.
செங்குறிச்சி பாண்டியனுாரை சேர்ந்தவர் விவசாயி இளையராஜா 35. தனது நிலத்தில் விளைந்த 19 மூடை மக்காச்சோளத்தை களத்தில் காயவைத்தார்.
மழை காரணமாக ஆலம்பட்டி நால்ரோடு அரசு சமுதாயக்கூடத்தில் வைத்திருந்தார்.
தீபாவளி பண்டிகை முடிந்ததும் விற்பனைக்காக கொண்டு செல்ல திட்டமிருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சமுதாய கூடத்தின் பூட்டை உடைத்த நபர்கள் உள்ளே இருந்த 700 கிலோ அளவிலான 11 மூடை மக்காச்சோளத்தை திருடி சென்றனர். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

