/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விவசாய கிணறுகளில் மின் மோட்டார் ,ஒயர்கள் திருட்டு
/
விவசாய கிணறுகளில் மின் மோட்டார் ,ஒயர்கள் திருட்டு
ADDED : பிப் 08, 2025 05:33 AM
வேடசந்துார்: வேடசந்துார் அருகே விவசாய கிணறுகளிலிருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான மின் மோட்டார், மின் ஒயர்கள் திருட்டு போயின.
வேடசந்துார் அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் விவசாயி சண்முகம் 40. இவரது தோட்டத்தில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மின் மோட்டார் ,ஒயர்கள் திருடு போனது.
போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.இதை தொடர்ந்து சண்முகம் கடன் வாங்கி புதிய மின் மோட்டார் ,மின் ஒயர்கள் பொருத்தி விவசாயம் செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு புதிய மின்மோட்டார்,மின்ஒயர்கள் திருடுபோனது . இதேபோல் முருகராஜ், முத்துச்சாமி, நடராஜ் ஆகியோர் தோட்டத்தில் இருந்த மின் ஒயர்களும் திருடுபோகின.
நேற்று முன் தினம் இரவு மீண்டும் மின் மோட்டார், ஒயர்கள் திருடு போனதால் மன உளைச்சலுக்கு ஆளான விவசாயிகள் வேடசந்துார் போலீசில் மீண்டும் புகார் அளித்தனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.