/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பெண்ணுக்கு ஆபாச படம் தேனி இன்ஜினியர் கைது டெல்லி போலீசார் நடவடிக்கை

ADDED : நவ 09, 2024 11:11 PM

வத்தலக்குண்டு:திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டைச் சேர்ந்த தி.மு.க., தொண்டரணி துணை அமைப்பாளர் சின்னா 43.
பத்தாண்டுகளுக்கு முன் டில்லி பெண் ஒருவருக்கு சின்னாவின் அலைபேசியில் இருந்து ஆபாச படங்கள் சென்றன. அப்பெண் டில்லி போலீசில் புகார் அளித்தார். தி.மு.க.,நிர்வாகி சின்னா டில்லி போலீசாரால் விசாரிக்கப்பட்டார்.
விசாரணையில் தொலைந்த சிம் கார்டை பயன்படுத்தி ஆபாச படங்கள் அனுப்பியதாகடில்லி போலீசிலும் வத்தலக்குண்டு ஸ்டேஷனிலும் சின்னா புகார் செய்தார்.
வத்தலக்குண்டு போலீசாரின் விசாரணையில் பூசாரிபட்டியைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஹரி பிரதீப் சின்னாவின் சிம் கார்டை பயன்படுத்தி ஆபாச படங்களை அனுப்பியது தெரிந்தது. டில்லி போலீசார் ஹரி பிரதீப்பை தேடி வந்தனர். ஒன்பது ஆண்டுகளுக்கு பின் தேனி மாவட்டம் அல்லி நகரத்தில் பதுங்கியிருந்த இன்ஜினியர் ஹரி பிரதீப்பை 34, வத்தலக்குண்டு, டில்லி போலீசார் கைது செய்தனர்.
நிலக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஹரி பிரதீப்பை டில்லி போலீசார் மேல் விசாரணைக்காக டில்லி அழைத்து சென்றனர்.