sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கட்டடங்கள் உண்டு நுாலகம் இல்லை; தவிப்பில் கிராம இளைஞர்கள்

/

கட்டடங்கள் உண்டு நுாலகம் இல்லை; தவிப்பில் கிராம இளைஞர்கள்

கட்டடங்கள் உண்டு நுாலகம் இல்லை; தவிப்பில் கிராம இளைஞர்கள்

கட்டடங்கள் உண்டு நுாலகம் இல்லை; தவிப்பில் கிராம இளைஞர்கள்


ADDED : ஆக 16, 2025 02:44 AM

Google News

ADDED : ஆக 16, 2025 02:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: அய்யலுார் பேரூராட்சி பகுதியில் நுாலகம் என்ற பெயரில் 3 கட்டடங்கள் கட்டிய போதிலும், நுாலகம் என்பது இல்லாததால் சுற்று கிராம மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் பரிதவிக்கின்றனர்.

அய்யலுார் பேரூராட்சியின் கிழக்கு பகுதியில் பஞ்சம்தாங்கி, காக்காயன்பட்டி, ஏ.கோம்பை, தெற்கு முடக்கு, குப்பாம்பட்டி, பாலத்தோட்டம், கிணத்துபட்டி, செங்குளத்துபட்டி, கணவாய்பட்டி, சுக்காவழி போன்ற மலை கிராமங்களும், சமவெளி பகுதியில் வைரபிள்ளைபட்டி, கொன்னையம்பட்டி, அரசன்செட்டிபட்டி, கெங்கையூர், கஸ்பாஅய்யலுார், குளத்துபட்டி, காக்காயன்குளத்துபட்டி, நைனான்குளத்துட்டி, டி.புதுார், சவரிபட்டி, தீத்தாகிழவனுார், மணியகாரன்பட்டி முத்துநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.

நீண்ட காலமாக பள்ளி படிப்புக்கு பின்னர் மேல் படிப்புக்கு திண்டுக்கல், திருச்சி,மணப்பாறை சென்றால் மட்டுமே சாத்தியம் என்ற நிலையில் தற்போது வண்டிகருப்பணசுவாமி கோயில் , தண்ணீர்பந்தம்பட்டி போன்ற ஊர்களில் கல்லுாரி படிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மாணவர்கள், இளைஞர்கள் போட்டி உலகத்தில் அறிவு திறனை வளர்க்க பொது அறிவு, நாட்டு நடப்பு நிகழ்வுகளை தெரிந்து கொள்ளவும்,போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள விரும்புவோருக்கு அய்யலுார் பகுதியில் நுாலகம் இல்லாதது பெரும் பாதிப்பை தருகிறது. அதே நேரம் பேரூராட்சி பகுதியில் 3 கட்டடங்கள் நுாலகம் என்ற பெயரில் கட்டப்பட்டு ரேஷன் கடை உள்ளிட்ட வேறு பயன்பாடுகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. அய்யலுாரில் நுாலகம் அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

75 ஆண்டு கடந்தும் நோ வசதி வி.பி.தமிழ்ச்செல்வன், நகர தலைவர், அ.தி.மு.க., ஐ.டி.,பிரிவு, அய்யலுார்: -அய்யலுார் பேரூராட்சி அந்தஸ்தில் இருந்தாலும் 2 வார்டுகளை தவிர மற்ற அனைத்து கிராமங்களை கொண்டுள்ளது. சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்தும் சில பகுதிகளுக்கு இன்னும் அடிப்படை வசதிகள் சென்றடையாத நிலையில் இருக்கும் பகுதிகள் பல உள்ளன. உலகத்தையே இயக்கும் அலைபேசி சேவை கிடைக்காத பகுதிகளும் நிறையவே உள்ளது. இப்பகுதியினருக்கு நுாலக சேவையும் கிடைக்காதது மிகவும் வருந்ததக்க விஷயம்.

வருத்தம் தரும் விஷயம் டி. தண்டபாணி, சமூக ஆர்வலர், கொல்லப்பட்டி புதுார்: -அய்யலுார் பகுதி இளைஞர்கள் நாளிதழ்கள், தேவையான புத்தகங்கள் படிக்க வடமதுரை நுாலகத்திற்கே செல்ல வேண்டியுள்ளது. சுற்றுப்பகுதி கிராமங்களில் வசிப்போருக்கு போக்குவரத்து சிரமமும், செலவும் கூடுதல் சுமையாகிறது. பல அரசு துறைகளிலும் நுாலக வரி என்ற பெயரில் வசூலிக்கப்பட்டும் அய்யலுாரில் மட்டும் நுாலகம் இல்லாதது வருத்தம் தரும் விஷயம்.

பெரும் பாதிப்பாக உள்ளது கே.அருள்குமார், வர்த்தக பிரமுகர், குருந்தம்பட்டி :- அய்யலுார் பேரூராட்சி பகுதியினர் மட்டுமின்றி சுக்காம்பட்டி,மோர்பட்டி, புத்துார் பகுதி மாணவர்கள், இளைஞர்கள் அய்யலுாருக்கு படிக்க வருகின்றனர். விடுமுறை நாட்கள், காலை,மாலை நேரங்களில் பொது அறிவு, நாட்டு நடப்பு நிகழ்வுகளை தெரிந்து கொள்ளவும், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு நுாலகம் இல்லாதது பெரும் பாதிப்பாக உள்ளது. -






      Dinamalar
      Follow us