/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல், கரூர், தேனியில் குழந்தை தொழிலாளர்கள் இல்லை
/
திண்டுக்கல், கரூர், தேனியில் குழந்தை தொழிலாளர்கள் இல்லை
திண்டுக்கல், கரூர், தேனியில் குழந்தை தொழிலாளர்கள் இல்லை
திண்டுக்கல், கரூர், தேனியில் குழந்தை தொழிலாளர்கள் இல்லை
ADDED : ஜன 07, 2024 06:59 AM

திண்டுக்கல்: ''அதிகாரிகளின் கடமை அர்ப்பணிப்பு, பொதுமக்களின் போதிய ஒத்துழைப்பால் திண்டுக்கல், கரூர், தேனி என மூன்று மாவட்டங்களில் குழந்தை தொழிலாளர்கள் முற்றிலும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக,'' மண்டல தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணி தெரிவித்தார்.
நலவாரியத்தில் இணைவது எப்படி...
18 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் தொழில் நிறுவனம், தொழிற்சங்கம் சார்ந்து பணிசான்று பெற்று www.tnuwwb.tn.gov.in என்ற இணைய முகவரியில் GIGV எனும் குறியீட்டு உள்தளத்திற்கு சென்று விபரங்கள்பதிவிட்டு உறுப்பினராகலாம். கலெக்டர் அலுவலக வளாகத்தின் அலுவலகத்திலும் நேரடியாக பதிவு செய்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெற உறுப்பினர் தகுதி பெறலாம். பதிவு கட்டணம் இல்லை.
நலவாரிய உறுப்பினர்கள் பலன் ...
நலவாரிய உறுப்பினரின் குடும்பத்தார் என்ற முறையில் மாவட்டத்தை சேர்ந்த 12ம் வகுப்பு கல்வி சாதனை மாணவி நந்தினிக்கு சிறப்பு ஊக்கத்தொகை ரூ.3 லட்சத்திற்கான காசோலை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் வழங்க பட்டது. இதேபோல் தொழிலாளர்களின் குடும்பஉறுப்பினர்களுக்கான பல சலுகைகளை பெற்று தர நலவாரியம் தொடர்ந்து செயல்படுகிறது.
உறுப்பினராக சேர தகுதி விபரம் ....
தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள், ஜொமோட்டோ, ஸ்விகி, டன்சோ போன்ற இணையதள நிறுவன ஊழியர்கள் , கிக் தொழிலாளர்கள் உட்பட தச்சு, கட்டட, கடை, உணவகங்கள் சார்ந்த பல்வேறு நிறுவன பணியாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக தகுதி உள்ளவர்கள் ஆவார்கள்.
தொழிலாளர்களுக்கான உரிமைகள் ...
ஒவ்வொரு தனியார் நிறுவனமும் அகவிலைப்படியை ஆண்டு தோறும் ஏப்ரல் மாதத்தில் மாற்றம் செய்தாகவேண்டும். அடிப்படை சம்பள விகிதத்தையும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைத்து தொழிலாளர்களுக்குவழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படை சட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கான உரிமைகளை பெற்று தருவதாகும். குறைந்தபட்ச கூலி சட்டத்தில் முடிக்கப்பட்ட வழக்குகளில் பல தொழிலாளர்கள் உரிமைகளை பெற்றுள்ளனர். குறைந்தபட்ச சம்பளம் என்பது தொழிலாளர்களின் அடிப்படை உரிமையாகும். இதற்கான அரசாணை உறுதிபட இயற்றபட்டுள்ளது.
வேறெந்த வகையில் நலவாரிய சலுகைகள் பெற முடியும்..
நலவாரியம் மூலமாக உறுப்பினர்களின் குடும்பத்தார்களுக்கு கல்வி, திருமணம், உதவி தொகைகள் கிடைக்கவழிவகை செய்யப்படும். இயற்கை மரணம், விபத்து, ஈமசடங்கு உதவி, ஒய்வூதியம், முடக்கு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், வீடு கட்ட நிதி உதவியாக ரூ.4லட்சம் வரை தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம்மூலமாக வழங்கப்படும். இதுபோன்று தொழிலாளர்கள் நலன் சார்ந்த பல சலுகைகள் உள்ளது.
குழந்தை தொழிலாளர்கள் தடுப்பு நடவடிக்கை...
கல்வி, வருவாய், காவல் துறை ஒருங்கிணைப்பில் குழந்தை தொழிலாளர்கள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுகிறோம். நிறுவன, அங்காடி, கூலி போன்ற இடங்களை ஆய்வு செய்து குழந்தை தொழிலாளர்களை மீட்டெடுக்கும் பட்சத்தில், சம்மந்தப்பட்ட தொழில் நிறுவனம், குழந்தையின் பெற்றோர்கள் சட்ட நடவடிக்கையிலிருந்து தப்பமுடியாது.
குற்றங்களுக்கான தண்டனை...
வறுமையை காரணம் காட்டி, அறியாமையால் சிக்கும் குழந்தை தொழிலாளர்களின் பெற்றோர்களை கருணை அடிப்படையில் முதன்முறையாக அறிவுரையில் விடப்படுவர். அதே தவறுகள் தொடரும் பட்சத்தில் நிறுவனங்களுக்கு 2 ஆண்டுகள் சிறை, 50 ஆயிரம் அபராதம், பெற்றோர்களுக்கும் தண்டனை விதிக்கப்படும்.
குழந்தை தொழிலாளிகள் என்பவர்கள் யார்...
14 வயதுக்குட்பட்ட தொழிலாளர்கள் குழந்தை தொழிலாளர்களாவர். இயந்திரங்கள், நெருப்பு போன்ற அபாயம் நிறைந்த தொழிலில் ஈடுபடுவோர்களுக்கு 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். இல்லையேல் குழந்தை தொழிலாளர்கள் வகையறாவில் சட்டம் தன் கடமையை செய்யும்.
நலவாரியத்தில் புகார் செய்வது எப்படி...
தொழிலாளர்கள் நலன் சார்ந்த பிரச்னைகள், குழந்தை தொழிலாளர்கள் தடுப்பு நடவடிக்கை, குறைந்த பட்ச சம்பள, கூலி பிரச்னை சம்மந்தமாக கலெக்டர் அலுவலகத்தில் நேரடியாக புகார் தெரிவிக்கலாம். இணையம் மூலமாகவும், 99524 28777 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டால் சட்ட நடவடிக்கை உடனடியாக பாயும்.
கொத்தடிமை குழந்தை தொழிலாளர்கள் யார்...
பெற்றோர்கள், பாதுகாவலர்கள் என குழந்தை சம்மந்தப்பட்ட ஒருவர் தொழில் நிறுவனங்களில் அட்வான்ஸ்தொகை பெற்று கொண்டு குழந்தைகளை வேலைக்கு அனுப்புதல் என்பது கொத்தடிமை குழந்தை தொழிலாளர்கள் தடுப்பு நடவடிக்கையில் சாரும். இந்த வழக்கில் நிறுவன உரிமையாளர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை பாயும்.பெற்றோர்களும் இது சம்மந்தமான சட்ட பிரிவில் கடுமையாக தண்டிக்க படுவர்.
மக்களிடம் விழிப்புணர்வு உள்ளதா...
உலக குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினத்தில் கலைநிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வுஏற்படுத்தப் படுகிறது. அதிகாரிகளின் கடமை அர்ப்பணிப்பு, பொதுமக்களின் போதிய ஒத்துழைப்பால் திண்டுக்கல், கரூர், தேனி ஆகிய மூன்று மாவட்டங்களில் குழந்தை தொழிலாளர்கள் முற்றிலும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மாதம்தோறும கூட்டம் நடத்தி அதிகாரிகள் குழந்தை தொழிலாளர் தடுப்பு பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர் என்றார்.