/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பாதயாத்திரை பக்தர்களுக்கான வசதிகள் இல்லவே இல்லை: மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்துவது அவசியம்
/
பாதயாத்திரை பக்தர்களுக்கான வசதிகள் இல்லவே இல்லை: மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்துவது அவசியம்
பாதயாத்திரை பக்தர்களுக்கான வசதிகள் இல்லவே இல்லை: மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்துவது அவசியம்
பாதயாத்திரை பக்தர்களுக்கான வசதிகள் இல்லவே இல்லை: மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்துவது அவசியம்
ADDED : ஜன 20, 2025 05:53 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு செல்லும் பாதயாத்திரை பக்தர்களுக்கு ரோடு முதல் கோயில் வரை கழிப்பிடம் உள்பட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத நிலையில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.மாவட்ட நிர்வாகம் இதன்மீது கவனம் செலுத்த வேண்டும்.
பழநி முருகன் கோயிலில் பிப். 11 ல் தைப்பூசம் நடக்கிறது. தமிழகம் முழுவதிலுமிருந்து பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். லட்சக்கணக்காண பக்தர்கள் பழநியில் கூடும் நிலையில் எந்தவித அடிப்படை வசதிகளுமே தேவஸ்தான நிர்வாகம் சார்பில் செய்யப்படவில்லை. கோயில், கிரிவீதி என எங்குமே போதிய அளவில் கழிப்பிடங்கள் இல்லை. ரோட்டோரங்களில் சுகாதாரக்கேடாக உள்ளது. தொற்று நோய்க்கு வழிவகுக்கும். நடமாடும் கழிப்பிட வாகனங்கள், தற்காலிக கழிப்பிடங்கள், தேவையான குடிநீர் குழாய்கள் என்பன உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளுமே பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இதுவரை செய்து தரப்படவில்லை. மாறாக கிடைக்கும் இடங்களில் பஞ்சாமிர்த ஸ்டால்கள் போடுவது, கோயில் உள், வெளிப்பிரகாரங்களில் கடைகளை போட்டு வியாபாரம் செய்வது போன்ற பணிகளிலேயே தேவஸ்தான நிர்வாகம் மும்முரமாக ஈடுபடுகிறது. பக்தர்களை பற்றி எந்தவித கவலையும்படுவதாக இல்லை. பார்க்கிங் வசதி என்பதே கிடையாது. ஓரிரு பார்க்கிங் மட்டுமே உள்ளதால் நாள்தோறும் பழநிக்கு ஆயிரக்கணக்கான வாகனங்களில் பொரும்பாலும் ரோடுகளிலேயே நிறுத்தப்படுகிறது. நோ பார்க்கிங் போர்டுகள் இருக்குமிடங்களெல்லாம் பார்க்கிங்காக இருக்கிறது. தேவஸ்தானம் தேவையான முன்னெற்பாடுகளை செய்யாமல் போலீசாரை சரிசெய்ய சொல்வது ஏற்க இயலாத ஒன்றாக இருக்கிறது. வாகனங்களுக்கு பணம் வசூலிக்கும் ஆர்வம் அவற்றை நிறுத்த இடத்தை தேர்வு செய்வதில் இல்லை. புறநகர் பைபாஸ் ரோடு தொடங்கி நகரின் சந்து, தெருக்கள் என அனைத்து இடங்களும் பார்க்கிங்காக மாறி வருகிறது. இதனால், உள்ளூர் மக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதுமட்டுமின்றி கூடுதல் தற்காலிக மின்விளக்குகள், அறிவிப்பு பலகைகள் என எதுவுமே பழநியை சுற்றி இல்லை என்பதால் பக்தர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். மலைமீது ஏறும் போது யானைப்பாதையில் ஒரே ஒரு கழிப்பிடம் மட்டுமே பயன்பாட்டில் இருக்கிறது. படிப்பாதையில் இடும்பன் கோயில் அருகே உள்ள கழிப்பிடம் நீண்ட நாட்களாகவே செயல்படவில்லை. இதனால் மலையின் ஓரங்களில் பக்தர்கள் சிறுநீர் கழிப்பதால் சுகாதாரக்கேடு நோய்தொற்று ஏற்படும் சூழல் உள்ளது. தற்காலிக கழிப்பிடங்கள் ஏதும் பாதயாத்திரை ரோட்டிலோ, மலையைச் சுற்றிலோ இல்லை. நடந்து வரும் பக்தர்களுக்கு ஒளிப்பட்டையோ விழிப்புணர்வோ ஏற்படுத்தவில்லை. இதனால் விபத்துகள் ஏற்படுகிறது.