/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தெருவிளக்குகள் எரியாததால் எங்கும் இருள் மயம்
/
தெருவிளக்குகள் எரியாததால் எங்கும் இருள் மயம்
ADDED : பிப் 21, 2024 05:57 AM

பயணிகளை ஓடவிடும் பஸ்கள்
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் சேலம்,ஈரோடு,கருர் செல்லும் பஸ்கள் உரிய இடத்தில் நிறுத்துதில்லை இரவு நேரங்களில் மையபகுதியில் சென்றுவிடுகிறது. இதானல் பெண்கள். முதியோர் பஸ் பின்புறமாக ஓடுகின்றனார் .என்.கமலராகவன், திண்டுக்கல்.
..............------
நாய்களால் அச்சம்
திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு அங்குநகர் பகுதியில் சுற்றி திரியும் நாய்களால் பொதுமக்கள் ,குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர் .ஆங்காங்கே கூட்டமாக நாய்கள் உள்ளதால் பாசாரிகள் அப்பகுதியில் செல்ல அச்சப்படுகின்றனர். ஆறுமுகம், திண்டுக்கல்.
................
ரோட்டில் ஓடும் கழிவு நீர்
திண்டுக்கல் சாலை ரோட்டில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு மூடி வழியாக கழிவு நீர் ரோட்டில் செல்வதால் துர்நாற்றம் விசுகிறது .இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாரிமுத்து, திண்டுக்கல்.
................-------சேதமடைந்த ரோடு
ரெட்டியார்சத்திரம் அருகே தாதன்கோட்டை- கரட்டுப்பட்டி ரோடு சேதமடைந்துள்ளது. பல மாதங்களாகியும் சீரமைக்கப்படாததால் விபத்துக்களை ஏற்படுத்தி வருகிறது. நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ரோட்டை சீரமைக்க முன்வர வேண்டும். -வி.ரெங்கசாமி, ரெட்டியார்சத்திரம்.
......................---------
அள்ளப் படாத குப்பை
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அள்ளப் படாமல் உள்ள குப்பையால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது .தினந்தோறும் அலுவலர்கள் ,மக்கள் வந்து செல்லும் வழியில் குவிந்துள்ள குப்பையால் முகம் சுளிக்கின்றனர். குப்பையை அகற்ற வேண்டும். நந்தகுமார், திண்டுக்கல்.
................---------தெருவில் மின்கம்பங்கள்
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் நாகவேணி நகர் தெருவில் இரண்டு மின்கம்பங்கள் உள்ளன. இதில் உள்ள மின் விளக்குகள் பல நாட்களாக எரியாமல் உள்ளது. இரவில் இருளில் மூழ்கி உள்ளதால் மக்கள் அச்சப்படுகின்றனர். மின் விளக்கை சரி செய்ய வேண்டும். கே.கோபிநாத், திண்டுக்கல்.
..................---------
பள்ளத்தால் விபத்து
ஆயக்குடி ஓபுளாபுரம் மேற்கு தெருவில் பாலத்தில் கற்களை வைத்து ரோட்டை சேதப்படுத்தி உள்ளனர். இதனால் பெரிய பள்ளம் ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது . சேதமடைந்த பாலத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.தாமோதரன், ஓபுளாபுரம்.
..................---------

