sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஓட்டுச்சாவடிகளில் மின்விளக்கு,சாய்வுதளம் வசதி  இல்லவே இல்லை: முன்னுரிமை அடிப்படையில் நிவர்த்தி செய்யலாமே

/

ஓட்டுச்சாவடிகளில் மின்விளக்கு,சாய்வுதளம் வசதி  இல்லவே இல்லை: முன்னுரிமை அடிப்படையில் நிவர்த்தி செய்யலாமே

ஓட்டுச்சாவடிகளில் மின்விளக்கு,சாய்வுதளம் வசதி  இல்லவே இல்லை: முன்னுரிமை அடிப்படையில் நிவர்த்தி செய்யலாமே

ஓட்டுச்சாவடிகளில் மின்விளக்கு,சாய்வுதளம் வசதி  இல்லவே இல்லை: முன்னுரிமை அடிப்படையில் நிவர்த்தி செய்யலாமே


ADDED : மார் 20, 2026 05:14 AM

Google News

ADDED : மார் 20, 2026 05:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சட்டசபை தேர்தல் ஏப்.23ல் நடக்கிறது. தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு 'ஸ்வீப்' நடவடிக்கைகள், ஓட்டு பதிவிற்கான முன்னேற்பாடு பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது.

மாவட்டத்தில் உள்ள 2301 ஓட்டுச்சாவடிகளில் 8 லட்சத்து 12 ஆயிரத்து 937 ஆண், 8 லட்சத்து 58 ஆயிரத்து 964 பெண், மூன்றாம் பாலினத்தவர் 174 என 16 லட்சத்து 72 ஆயிரத்து 75 பேர் வாக்களிப்பதற்கு அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேலை ஆரம்பிக்கப் பட்டுள்ளது. ஓட்டுச் சாவடிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தருவதை முன்னுரிமை அடிப்படையில் கவனிக்க வேண்டும் என வாக்காளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி ஓட்டுச்சாவடிகளில் போதிய வெளிச்சம், குடிநீர், கழிப்பறை, சாய்வுதளம், பாதை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வது கட்டாயம். பல இடங்களில் மின் விளக்குகள், சாய்வுதளம் இல்லை. மலைபாங்கான பகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடிகளுக்கு சரியான சாலை வசதி இல்லை. வாக்காளர் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு முன்னுரிமை அடிப்படையில் ஓட்டுச்சாவடிகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யவேண்டும். அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளி, முதியோர்களை அழைத்துச்செல்ல வசதியாக வீல்சேர் தயார் நிலையில் இருப்பு வைக்கவேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us