/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'நீதிமன்ற தீர்ப்பை அப்படியே ஏற்க வேண்டிய அவசியம் இல்லை-' சொல்கிறார் அமைச்சர் பெரியசாமி

ADDED : டிச 07, 2025 06:48 AM

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி கூறியதாவது:
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மேல் முறையீடு செய்வது எங்களது அடிப்படை உரிமை. நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சட்டம், அவசியம் இல்லை. உரிமைகளை பெறுவதற்கு உச்சநீதிமன்றம் வரை முறையிடலாம் என சட்டமே வகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு நிலுவையில் உள்ள இதற்கு விரைவில் நல்ல தீர்ப்பு வரும்.
எஸ்.ஐ.ஆர்., பெயரில் ஆத்துார் தொகுதியில் 22 ஆயிரம் வாக்காளர்களை நீக்கி உள்ளனர்.இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு, வீடாக செல்லவில்லை. வாக்காளர்கள் முறையாக பூர்த்தி செய்த கொடுத்த விண்ணப்பத்தையே குடிபெயர்ந்து விட்டதாக பதிவேற்றம் செய்து குறித்துள்ளனர். பாலக்கனுாத்து, நரிப்பட்டி, நீல மலைக்கோட்டை பகுதியில் இறந்தவர்களை வாக்காளர் பட்டியல் சேர்த்துள்ளனர். அரசுக்கு கணக்குக்காட்ட வேண்டும் என்பதற்காக வேலை பார்க்கின்றனர். இப்பணிகளை மத்திய அரசு ரத்து செய்யவேண்டும் என்றார்.