sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கழிவுநீர் செல்ல வழி இல்லை... விஷ பூச்சிகள் தொல்லை... திணறும் திண்டுக்கல் 32வது வார்டு மக்கள்

/

கழிவுநீர் செல்ல வழி இல்லை... விஷ பூச்சிகள் தொல்லை... திணறும் திண்டுக்கல் 32வது வார்டு மக்கள்

கழிவுநீர் செல்ல வழி இல்லை... விஷ பூச்சிகள் தொல்லை... திணறும் திண்டுக்கல் 32வது வார்டு மக்கள்

கழிவுநீர் செல்ல வழி இல்லை... விஷ பூச்சிகள் தொல்லை... திணறும் திண்டுக்கல் 32வது வார்டு மக்கள்


ADDED : அக் 19, 2025 03:36 AM

Google News

ADDED : அக் 19, 2025 03:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: தரமற்ற சாலைகள், சரி செய்யப்படாத ஓடைகள், ரேஷன் பொருள் பிரச்னை என தினசரி தேவைகள் பூர்த்தி அடைவதே இங்கு பெரும் பிரச்னையாக உள்ளது என புலம்புகின்றனர் திண்டுக்கல் மாநகராட்சி 32வது வார்டு மக்கள்.

அனுமந்த நகர், எழில் நகர், கிழக்கு ஆரோக்கிய மாதா தெரு, வசந்தம் நகர், ரவுண்ட் ரோடு புதுார் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் கூலி வேலை செய்வோர், அரசு அதிகாரிகள், கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்வோர் என பலதரப்பட்ட மக்களும் வசிக்கின்றனர். அனுமந்த நகர் பகுதியில் போடப்பட்ட சாலைகள் பல இடங்களில் தரமற்றதாக உள்ளது. மெயின் ரோடையும், குடியிருப்பு பகுதியையும் இணைக்கும் சந்திப்பு பகுதிகள், மழை நீர் வடிகால் ஓடை, சாக்கடை போன்றவை சரியான கட்டமைப்பு இல்லாமல் கான்கிரீட் பெயர்ந்து காணப்படுகிறது. சாலையில் வீசப்படும் குப்பையால் அப்பகுதியே குப்பைமேடென துர்நாற்றம் வீசுகிறது. புதர்மண்டி கிடக்கும் பொது இடங்களால் பாம்பு, தேள் போன்ற விஷப்பூச்சிகள் தொல்லை அதிகரித்துள்ளது, கால்வாய் அடைப்பினால் கழிவுநீர் செல்ல வழிஇல்லாமல் தேங்கி நிற்கிறது, தெரு விளக்குகள் அடிக்கடி பழுதாகிறது, பொதுக்கழிப்பறை சுகாதாரமற்ற நிலையில் உள்ளது, மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லை என பல பிரச்னைகளை மக்கள் முன்வைத்துள்ளனர்.

அச்சமாக உள்ளது லோகேஷ், மாவட்டத் தலைவர்,கிழக்கு மாவட்ட பா.ஜ., உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு: வார்டுக்குட்பட்ட ரேஷன் கடையில் அனைத்து பொருட்களும் கிடைப்பதில்லை. சாலை பணிகள் பல இடங்களிலும் தரமற்றதாக உள்ளது. குடியிருப்பு பகுதியையும் மெயின் ரோட்டையும் இணைக்கும் சந்திப்புகளில் கழிவுநீர் ஓடைகளின் மேல் அமைக்கப்பட்டிருக்கும் பாலத்தில் கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டிருக்கிறது. வீடுகளிலிருந்து கழிவுநீர் வெளியேற்ற முடிவதில்லை. புதர் மண்டிக்கிடக்கும் இடங்கள், பாம்பு, தேள் விஷப்பூச்சிகளின் புகலிடமாக திகழ்கிறது. பிள்ளைகளை தெருக்களில் விளையாட அனுமதிக்கவே அச்சமாக உள்ளது.

விளக்குகள் எரிவதில்லை சுரேஷ்பாபு, வழக்கறிஞர், அனுமந்த நகர்: அடிப்படைத் தேவைகளே வார்டு மக்களுக்கு இன்னும் சரியாக கிடைக்கவில்லை. தெரு முனைகளில் குப்பை வீசப்படுகிறது. இதை, ஆடு, மாடு, நாய் உள்ளிட்டவை கிளறுவதால் ரோடு முழுவதும் குப்பையாக பரவிக்கிடக்கிறது. காய்கறி கழிவுகள், மீதமான உணவு, வீட்டுக்கழிவுகள் குவிவதால் வார்டில் சுகாதாரகேடு சூழல் உள்ளது. அனுமந்த நகர் மேம்பாலத்தில் இருபுறங்களிலும் மண் நிரம்பிக்கிடக்கிறது. டூவீலரில் செல்வோர் விபத்தில் சிக்குகிறார்கள். மழைக்காலம் என்பதால் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. தெருவிளக்குகள் எரிவதில்லை.

விரைவில் தீர்வு ராஜப்பா, கவுன்சிலர் ,(தி.மு.க., துணைமேயர்): வார்டில் உள்ள அனைத்து சாலைகளும் சீரமைக்கப்பட்டுள்ளது. அனுமந்த நகர், எழில் நகர் பகுதிகளில் மக்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றித்தரப்பட்டுள்ளது. இன்னும் சாக்கடை பணிகள் மட்டுமே பாக்கி உள்ளது. அந்தப்பணிகளும் விரைவில் துவங்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ரூ.6 கோடி மாநகராட்சிக்கு வளர்ச்சி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி தேவைகள், குறைகளை நிறைவேற்றித்தரப்படும். தீபாவளி முடிந்த சில நாட்களில் சாக்கடை கட்டுவதற்கான பணிகளுக்கு டென்டர் விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் இந்த பிரச்னை தீர்த்துவைக்கப்படும் என்றார்.






      Dinamalar
      Follow us