/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நேற்றும் கடும் அதிர்வுடன் வெடிச்சத்தம்
/
நேற்றும் கடும் அதிர்வுடன் வெடிச்சத்தம்
ADDED : ஏப் 18, 2025 02:27 AM

வடமதுரை:திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பகுதியில் நேற்றும் காலை 10:42, 11:15 என இரு முறை கடும் அதிர்வு, பயங்கர வெடிச்சத்தம் கேட்டது.
வடமதுரை, வேடசந்துார், சாணார்பட்டி, திண்டுக்கல் பகுதிகளை மையமாக கொண்டு 20 முதல் 40 கி.மீ., சுற்றளவில் அவ்வப்போது பகல் நேரங்களில் மட்டும் பயங்கர வெடிச்சத்தம் கேட்கிறது. வெடிச்சத்தத்தை தொடர்ந்து சில நேரங்களில் விமானங்கள் பறந்து செல்கிறது. பல நேரங்களில் அவ்வாறு பறப்பதில்லை.
7 ஆண்டுகளாக இது தொடர்ந்தாலும் வெடிச்சத்தத்திற்கான காரணம் குறித்து அரசு சார்பில் எந்தவொரு விளக்கமும் தரப்படவில்லை. இதனால் பலவிஷம பிரசாரம் பரவுகிறது.
நேற்றுமுன்தினம் வெடிச்சத்தம் ஏற்பட்டது. நேற்றும் காலை 10:42, 11:15 மணி என இரு முறை வடமதுரை, எரியோடு சுற்றுப்பகுதி கிராமங்களில் கடும் அதிர்வுடன் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. கால்நடைகள் அலறியடித்து ஓடின. நேற்று சிறிது நேரத்தில் பயிற்சி விமானம் பறந்து சென்றது. மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் விளக்கம் தர மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.

