ADDED : டிச 03, 2024 04:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பெஞ்சல் புயல் எதிரொலியாக அடர் பனிமூட்டம் நிலவியதால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்றன.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெஞ்சல் புயலால் சில நாட்களாக தொடர் சாரல் மழை பெய்தது. புயல் கரையை கடந்த நிலையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் சூறைக்காற்று வீசி வருகிறது. நேற்று காலை வெயில் முகம் பளிச்சிட்ட நிலையில் மதியம் 12:00 மணிக்கு நகரை அடர் பனிமூட்டம் சூழ்ந்தது.
எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டு சென்றன. மதியம் 3:00 மணி வரை பனிச்சாரல் நீடித்தது. மாலையில் வானம் தெளிவானது. இருந்த போதும் காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது. தெளிவற்ற வானிலையால் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்தது.