/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தென்மண்டல நீச்சல் போட்டி திருச்செங்கோடு பள்ளி சாம்பியன்
/
தென்மண்டல நீச்சல் போட்டி திருச்செங்கோடு பள்ளி சாம்பியன்
தென்மண்டல நீச்சல் போட்டி திருச்செங்கோடு பள்ளி சாம்பியன்
தென்மண்டல நீச்சல் போட்டி திருச்செங்கோடு பள்ளி சாம்பியன்
ADDED : ஆக 11, 2025 04:07 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம், லக்சர் வேர்ல்ட் பள்ளி இணைந்து தென்மண்டல மாவட்டங்களுக்கு இடையேயான நீச்சல் போட்டியை நடத்தின. லக்சர் வேர்ல்ட் பள்ளி தாளாளர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். இந்தப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி, பள்ளிகளில் இருந்து 350 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். தனித்தனியாக 9 பிரிவுகளாக போட்டிகள் நடந்தது.
தமிழக கால்பந்து சங்கத்தின் தலைவர் சண்முகம், கேரம் சங்கத்தின் துணைத்தலைவர் காஜாமைதீன், மாவட்ட கால்பந்து சங்கத்தின் துணைத்தலைவர் ரமேஷ் பட்டேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், சான்றிதழ், சுழற்கோப்பைகளை வழங்கினர்.
போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை திருச்செங்கோடு விரிக்சா குளோபல் பள்ளி வென்றது. மேற்கு ரோட்டரி சங்க நிர்வாகிகள் சிவராமன், கண்ணன், பள்ளி முதல்வர் ஹெலன் பொன்ராஜ், ஆசிரியர் அன்பில்ராஜ், ஆனந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.