ADDED : டிச 29, 2024 04:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, பொது நூலகத் துறை சார்பில் மாவட்ட வாரியாக திருக்குறள் வினாடி - வினா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி திண்டுக்கல் மாவட்ட மைய நுாலகத்தில் நடந்த போட்டியில் மாணவர்கள், வாசகர்கள் என 35 பேர் பங்கேற்றனர்.
3 பேர் முதலிடம் பெற்றனர். இந்த மூவருக்கும் தனியாக போட்டி நடத்தப்பட்டது. இதில் திண்டுக்கல் புனித வளனார் மேல்நிலைப் பள்ளி மாணவி பிபியானா முதலிடம், அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி மல்லிகா 2வது இடம், எஸ்.எஸ்.எம்., கல்லுாரி மாணவர் விமல் சாஸ்தா 3ம் இடம் பிடித்தனர். வெற்றிப் பெற்றவர்களுக்கு ரூ.5ஆயிரம், ரூ.3ஆயிரம், ரூ.2ஆயிரம் வீதம் பரிசு தொகை வழங்கப்பட உள்ளது.

