ADDED : பிப் 12, 2025 04:23 AM
திண்டுக்கல் : மன்னர் திருமலை நாயக்கர் ஜெயந்தியை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள அவரது சிலைக்கு தி.மு.க., சார்பில் மாவட்ட செயலர் எம்.எல்.ஏ., செந்தில்குமார் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
அ.தி.மு.க., சார்பில் மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் ராஜ்மோகன் தலைமையிலும், தே.மு.தி.க., சார்பில் மாவட்டத் தலைவர் மாதவன் தலைமையிலும், பா.ஜ., சார்பில் கிழக்கு மாவட்டத் தலைவர் முத்துராமலிங்கம், ம.தி.மு.க., சார்பில் மாவட்டச் செயலர் செல்வராகவன் தலைமையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நாயுடு பேரவை சார்பில் சுந்தராஜன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
நத்தம்: லிங்கமநாயக்கர் பேரவை,தமிழ்நாடு நாயுடு, நாயக்கர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மாமன்னர் திருமலை நாயக்கர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. லிங்கமநாயக்கர் பேரவை மாவட்ட தலைவர் வீரமணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன், துணை த்தலைவர் கணபதி, துணைச் செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தனர். திருமலை நாயக்கரின் உருவப் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. பேரவை செயற்குழு உறுப்பினர்கள் தினேஷ், பாண்டித்துரை கலந்து கொண்டனர்.