/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
எம்.ஜி.ஆர்., ஜெ., படங்களை அகற்றாமல் பார்த்துக்கோங்க பழனிசாமிக்கு திருமாவளவன் வேண்டுகோள்
/
எம்.ஜி.ஆர்., ஜெ., படங்களை அகற்றாமல் பார்த்துக்கோங்க பழனிசாமிக்கு திருமாவளவன் வேண்டுகோள்
எம்.ஜி.ஆர்., ஜெ., படங்களை அகற்றாமல் பார்த்துக்கோங்க பழனிசாமிக்கு திருமாவளவன் வேண்டுகோள்
எம்.ஜி.ஆர்., ஜெ., படங்களை அகற்றாமல் பார்த்துக்கோங்க பழனிசாமிக்கு திருமாவளவன் வேண்டுகோள்
ADDED : மார் 01, 2026 06:20 AM
திண்டுக்கல்: மதுரையில் நடை பெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்ட வரவேற்பு பேனரில் ஈ.வெ.ரா., படம் அகற்றப்பட்டது. இந்நிலையில் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் அகற்றப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமிக்கு திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தென்காசியில் நேற்று நடந்த கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் வி.சி., தலைவர் திருமாவளவன் ஈரோடு புறப்படார். திண்டுக்கல் தோமையார்புரம் பைபாஸ் ரோட்டில் கட்சியினர் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இன்னொரு அயோத்தியாக மாறுவதற்கு மதுரை ஒன்றும் உத்தரப்பிரதேசத்தில் இல்லை. இதற்கு தமிழக மக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள். பிரதமரின் திருப்பரங்குன்ற முருகன் தரிசனம் அவருக்கு நல்வழி காட்ட வேண்டும். விஜயின் விவாகரத்து விஷயம் குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை.
விடுதலை சிறுத்தைகள் ஆளும் கட்சி அல்ல; ஆள துடிக்கும் இடத்திலும் இல்லை. தேர்தல் ஆணையம் எங்களுக்கு பானை சின்னம் ஒதுக்கியுள்ளது. எனவே சொந்த சின்னத்தில் போட்டியிடுவோம். கூட்டணி குறித்து ராமதாஸ் அறிவித்த பின் எங்களது நிலைப்பாடு குறித்து பார்க்கலாம்.
மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்ட வரவேற்பு பேனரில் ஈ.வெ.ரா., படம் அகற்றப்பட்டுள்ளது. இதுபோல் முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களையும் அகற்றாமல் பழனிசாமி பார்த்துக் கொள்ள வேண்டும்.
பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு வருவது புதிதல்ல. ஒவ்வொரு தேர்தலிலும் அவர்கள் பல உறுதிமொழிகளை தந்துள்ளனர். ஆனால் எதுவும் நடக்கவில்லை.
பீஹாரில் நிதீஷ்குமாரை கையாண்டது போல தமிழகத்தில் அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வை பா.ஜ., எளிதாக கையாள முடியாது. அ.தி.மு.க., மாறுபட்ட கருத்தை கொண்டிருந்தாலும் அதற்கென்று தனித்தன்மை உள்ளது.
அ.தி.மு.க.,வினர் பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்தது தான் ஜெயலலிதா முதுகில் குத்திய துரோகச்செயல் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் தி.மு.க.வில் இணைவதில் வியப்பில்லை.
கொள்கையை பொறுத்தவரை இரு கட்சிகளுக்கும் ஒரே நிலைப்பாடு தான் என்றார்.

