/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை'யில் பூத்துக்குலுங்கும் காட்டு ரோஜா
/
'கொடை'யில் பூத்துக்குலுங்கும் காட்டு ரோஜா
ADDED : மார் 01, 2026 05:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: மார்ச் 1-: கொடைக்கானல் பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்காவில் ஏப்ரல், மே மாதத்தில் தொடங்கும் கோடை சீசனுக்காக புதிய மலர் நாற்றுக்கள் நடப்பட்டுள்ளன. ரோஜா பூங்காவில் செடிகளில் கவாத்து எடுக்கப்பட்டு பூக்களின்றி வெறுமனே உள்ளன.
பிரையன்ட் பூங்காவில் காட்டு ரோஜா பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. இதை ரசித்த சுற்றுலா பயணிகள் அதன் பின்னால் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இவ்வகை ரோஜா செடிகள் ஆண்டு முழுவதும் பூக்கும் தன்மை கொண்டது. இதில் இருந்து வேர் குச்சிகள் தயார் செய்யப்பட்டு ஒட்டு ரோஜாக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

