/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இதுவும் அவசியம் தானே ஊராட்சிகள் தோறும் ஆவின் கொள்முதல் நிலையம்
/
இதுவும் அவசியம் தானே ஊராட்சிகள் தோறும் ஆவின் கொள்முதல் நிலையம்
இதுவும் அவசியம் தானே ஊராட்சிகள் தோறும் ஆவின் கொள்முதல் நிலையம்
இதுவும் அவசியம் தானே ஊராட்சிகள் தோறும் ஆவின் கொள்முதல் நிலையம்
ADDED : ஆக 13, 2025 02:14 AM

கிராமங்களில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. பெரும்பாலான விவசாயிகள் தங்களுக்கான வருமானத்திற்கு கறவை மாடுகளை மட்டுமே நம்பி உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 3 லட்சம் கறவை மாடுகள் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
வறட்சி ,போதிய மழையின்மை போன்ற காரணங்களால் கால்நடைகளுக்கான தீவனங்கள்,கலப்பு தீவனங்களை கூடுதல் விலை கொடுத்து வாங்குவது, பராமரிப்பது போன்ற காரணங்களால் விவசாயிகள் சிரமத்தை சந்திக்கின்றனர். இருந்தாலும் விவசாயிகள் கறவை மாடு வளர்ப்பு தொழிலை மட்டுமே நம்பி உள்ளனர்.
கிராமங்களில் உற்பத்தி செய்யப்படும் பாலை தமிழகம் மட்டுமின்றி வெளி மாநில, தனியார் பால் கொள்முதல் நிறுவனங்களும் கொள்முதல் செய்கின்றன. ஆனாலும் போதிய விலை இல்லை என விவசாயிகள் குமுறுகின்றனர் இது மட்டுமின்றி தனியார் பால் கொள்முதல் நிலையங்களில் பொதுமக்களுக்கான சில்லறை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் ஒரு மாதமாக இதுவும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் கிராம மக்கள், சிறு குழந்தைகளை வைத்துள்ளோர் கூட்டுறவு சொசைட்டிகளை நாடிச் செல்தல், பாக்கெட் பாலை வாங்கும் நிலையில் உள்ளனர்.
ஒரு ஒன்றியத்திற்கு, 15 முதல் 20 ஊராட்சிகள் உள்ள நிலையில் ஒரு சில ஊராட்சிகளில் மட்டுமே ஆவின் பால் கொள்முதல் நிலையங்கள் உள்ளன.
இதன் மூலம் ஆவின் பால் கொள்முதல் நிலையங்கள் உள்ள ஊராட்சி மக்கள் பயனடைகின்றனர்.
ஆவின் இல்லாத ஊராட்சி மக்கள் , கறவை மாடு வளர்ப்போர் போதிய பயன்பெற முடியாமல் தவிக்கின்றனர். திண்டுக்கல் மாவட்ட மக்களின் நலன் கருதி ஊராட்சிக்கு ஒரு ஆவின் கூட்டுறவு பால் சொசைட்டி துவக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.