/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தி.மு.க.,வை நம்பியவர்கள் தெருவில் நிற்கின்றனர் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேச்சு

ADDED : அக் 20, 2024 04:51 AM

நிலக்கோட்டை, ''தி.மு.க.,வை நம்பிய கூட்டணி கட்சியினர் தெருவில் நிற்கின்றனர்'' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசினார்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பாக நிலக்கோட்டையில் நடந்த அ.தி.மு.க., தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
அ.தி.மு.க., கரடுமுரடான பாதைகளை கடந்து வந்துள்ளது. எம்.ஜி.ஆரின் மக்கள் செல்வாக்கால் முன்னால் முதல்வர் கருணாநிதியின் பழிவாங்கும் நடவடிக்கைகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சோதனைகளை சாதனைகளாக மாற்றி இன்று 53ம் ஆண்டில் இருக்கிறோம். இவர்களின் வழியில் மக்கள் மத்தியில் இந்த இயக்கத்தினை உயிரோட்டமுள்ள இயக்கமாக மீண்டும் துாக்கி நிறுத்தியவர் பொதுச்செயலாளர் பழனிசாமி .தற்போதைய தி.மு.க., ஆட்சி விளம்பர ஆட்சி. வாயிலே வடை சுடும் ஆட்சி. கட்சி ரீதியாக பா.ஜ.,வும் தி.மு.க.,வும் தோழமை கட்சிகள் போல் உறவு வைத்துள்ளன.
இதன் மூலம் தமிழகத்தை வஞ்சித்து கொண்டிருக்கின்றனர். தி.மு.க.,வை நம்பிய கூட்டணி கட்சியினர் தெருவில் நிற்கின்றனர். தோழமை கட்சியினர் விழி பிதுங்கி இருக்கின்றனர். இதன் விளைவுகள் விரைவில் வெளிப்படும் என்றார். நிலக்கோட்டை எம்.எல்.ஏ., தேன்மொழி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள்யாகப்பன், நல்லதம்பி முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.பி., உதயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், ஜெ பேரவை இணை செயலாளர் கண்ணன், நிர்வாகிகள் மோகன், பாண்டியன், ரெஜினா நாயகம், தண்டபாணி, சேகர், பீர்முகம்மது, மாசானம், ரேவதி தங்கபாண்டியன், ராஜா, மணவை மாறன் பங்கேற்றனர்.