/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விபத்தில் சிக்குவோருக்கு உதவியவர்களை சாட்சியாக சேர்ப்பதில்லை: இன்ஸ்பெக்டர்

ADDED : நவ 21, 2024 04:55 AM
வடமதுரை: ''விபத்துக்களில் சிக்கியோரை காப்பாற்றும் யாரையும் அவர்களது விருப்பமின்றி சாட்சிகளாக போலீசார் சேர்க்க மாட்டார்கள்'' என வடமதுரை இன்ஸ்பெக்டர் கண்ணன் தெரிவித்தார்.
வடமதுரை தேரடி ஆட்டோ உரிமையாளர்கள், டிரைவர்களுடனான விழிப்புணர்வு பிரசாரத்தில் அவர் பேசியதாவது: விபத்துக்களில் சிக்குவோரை எவ்வித தயக்கமும் இன்றி உதவி செய்து காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறான விபத்துக்களில் உதவி செய்வோரை விருப்பம் இல்லாமல் போலீசார் சாட்சிகளாக சேர்க்க மாட்டார்கள்.
உதவி செய்தால் சாட்சியாக சேர்த்து நீதிமன்றம், வழக்கு என அலைக்கழிப்பு செய்யப்படுவோம் என்ற அச்சம் யாருக்குமே இனி வேண்டாம்.
பொது இடங்களில் சந்தேகத்திற்கிடமாக முறையில் காணப்படுவோர், சைபர் குற்றங்களில் ஈடுபடுவோர்களை ரகசியமாக புகைப்படம் எடுத்து போலீசாருக்கு தந்து உதவ வேண்டும்.
தகவல் தருவோர் குறித்து ரகசியம் காக்கப்படும் என்றார்.