/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒரே மரத்தில் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் மக்கள் தொந்தரவின்றி ஆண்டுக்கணக்கில் குடித்தனம்

ADDED : ஜன 18, 2025 07:20 AM

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை அருகே குளத்து கரையில் உள்ள புளிய மரத்தில் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் மக்கள் தொந்தரவின்றி ஆண்டுக்கணக்கில் குடிகொண்டுள்ளன.
பறவை இனங்களில் நீண்ட துாரம் பறக்கக்கூடிய முதுகெலும்பு உள்ள பாலுாட்டி வகையை சேர்ந்தது வவ்வால். இவற்றில் ஆயிரத்திற்கு மேற்பட்ட வகைகள் உள்ளன .இந்த வவ்வால்கள் மலைப்பிரதேசங்களில் உள்ள மரங்களில் கூட்டமாக தலைகீழாக தொங்கியபடி வாழும். இவைகள் குடியிருக்கும் பகுதியில் இதன் கீச், கீச் சத்தம் தொடர்ந்து ஒலித்துகொண்டே இருக்கும்.
வவ்வால்கள் பகலில் எங்கும் செல்லாது. தனது இருப்பிடத்திலே தொங்கிக் கொண்டே இருக்கும். இதன் முக்கிய உணவே பழங்கள் தான். இரவு துவங்கியதும் பழம் நிறைந்த மரங்களை தேடி வெகு துாரத்திற்கு சென்று தனது உணவு வேட்டையை துவக்கும். மலைப் பிரதேசங்களுக்கு கூட சென்று தன் உணவை தேடி உண்டு மீண்டும் தன் இருப்பிடத்திற்கே வந்து சேரும் அபூர்வகுணம் கொண்டதுதான் இந்த வவ்வால்கள்.இப்படிப்பட்ட அதிசய பறவை இனமான வவ்வால்கள் குஜிலியம்பாறை மல்லபுரம்சின்னக்குளத்தில் உள்ள புளிய மரத்தில் ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் ஆண்டுக்கணக்கில் தங்கி உள்ளன. இவைகள் பொதுமக்களுக்கு எந்த தொந்தரவும் செய்யாத நிலையில் பொதுமக்களும் எந்த தொந்தரவும் செய்வதில்லை.