/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநியில் ஆயிரக்கணக்கான கிலோ பஞ்சாமிர்தம் கீழே கொட்டி அழிப்பு காலாவதி தேதிக்கு முன்பே கெட்டுப்போனதால் நடவடிக்கை

ADDED : பிப் 17, 2024 02:18 AM
பழநி:பழநி முருகன் கோயில் சார்பில் தைப்பூச விழாவிற்காக தயாரிக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான கிலோ பஞ்சாமிர்தம் காலாவதி தேதிக்கு முன்பே கெட்டுப்போனதால் ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தையத்தில் உள்ள கோயில் இடத்தில் கொட்டி அழித்துள்ளனர் .
பழநி கோயில் பஞ்சாமிர்தம் புவிசார் குறியீடு பெற்றுள்ளது. அண்மையில் பக்தர்களுக்கு காலாவதி ஆன பிரசாத பொருட்கள் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் கோயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது. இதை தொடர்ந்து கோயில் பஞ்சாமிர்தத்தை உணவு பாதுகாப்பு துறையினர் சோதனைக்கு எடுத்து சென்றனர். அதன் அறிக்கையும் இதுவரை வெளியாகவில்லை.
பிரச்னை குறித்து விளக்கமளித்த கோயில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் 'குறிப்பிட்டதேதிக்கு பின் 15 நாட்களுக்கு மேலும் பஞ்சாமிர்தம் கெட்டுப்போகாது. அவதுாறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
ஆனால் தைப்பூசத்திற்கு தயாரிக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான கிலோ பஞ்சாமிர்தம் காலாவதி தேதிக்கு முன்பே கெட்டு போனதால் கள்ளிமந்தையத்தில் உள்ள கோயில் இடத்தில் கொட்டி அழித்துள்ளனர்.
விஸ்வ ஹிந்து பரிஷத் திருக்கோயில்கள் திருமடங்கள் மாநில செயலாளர் செந்தில் கூறியதாவது: பழநி கோயில் நிர்வாகம் கோயில் பிரசாதத்தை பக்தர்களுக்கு தரமாக வழங்க அக்கறை செலுத்த வேண்டும். கெட்டுப்போன பஞ்சாமிர்தம் அழிக்கப்பட்டது தொடர்பாக அறநிலையத்துறை ஆணையர் நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும். அழிக்கப்பட்ட பஞ்சாமிர்தத்திற்கான தொகையை இதில் தொடர்புடைய அதிகாரிகளிடம் வசூல் செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அலுவலர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றார்.
பஞ்சாமிர்தம் தரமாக தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், காலாவதிக்கு பிறகும் பயன்படுத்தலாம் என அறங்காவலர் குழு தலைவர் கூறிய நிலையில் காலாவதி தேதிக்கு முன்பே கெட்டுப்போனது பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.