/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
புதர்மண்டிய 'கொடை' அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு அச்சுறுத்தல்
/
புதர்மண்டிய 'கொடை' அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு அச்சுறுத்தல்
புதர்மண்டிய 'கொடை' அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு அச்சுறுத்தல்
புதர்மண்டிய 'கொடை' அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு அச்சுறுத்தல்
ADDED : அக் 21, 2025 03:57 AM

கொடைக்கானல்: கொடைக்கானல் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதர்கள் அகற்றாத நிலையில் விஷ பூச்சிகளின நடமாட்டம் அதிகரித்துள்ளது.
சுற்றுலா நகரான கொடைக்கானலுக்கு நாள்தோறும் ஏராளமானோர் வருகின்றனர். 50க்கும் மேற்பட்ட உட்கடை கிராமத்தினர் சிகிச்சை பெறுவது மற்றும், விபத்து தருணத்தில் அவசர சிகிச்சை, பிரசவம், ஸ்கேன் உள்ளிட்ட சிகிச்சைக்கு அரசு மருத்துவமனை உள்ளது. இச்சூழலில் அவசர சிகிச்சை பிரிவு,தாய்சேய், ஸ்கேன் மையம், வெளிநோயாளிகள் பிரிவு என ஒட்டுமொத்த வளாகம் முழுமையும் புதர்மண்டியுள்ளது.
இதனால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களால் சிகிச்சை பெற வருவோர் அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றனர். வளாக சுவர்கள் முழுமை பெறாத நிலையில் காட்டுமாடுகள் புதர்களில் சர்வ சாதரணமாக நடமாடி மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகளும் காட்சி பொருளாக உள்ளது. புதர்களை அகற்றி அவ்விடங்களில் மலர் செடிகளை நடவு செய்து பூங்காவாக மாற்றும் பட்சத்தில் சிகிச்சை பெற வருவோர் மனநிலை புத்துணர்ச்சி பெறும். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.