/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சமூக விரோதிகளால் அச்சுறுத்தல்; வியாபாரிகள் கடையடைப்பு
/
சமூக விரோதிகளால் அச்சுறுத்தல்; வியாபாரிகள் கடையடைப்பு
சமூக விரோதிகளால் அச்சுறுத்தல்; வியாபாரிகள் கடையடைப்பு
சமூக விரோதிகளால் அச்சுறுத்தல்; வியாபாரிகள் கடையடைப்பு
ADDED : ஆக 13, 2025 01:27 AM
வேடசந்துார்; திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் அருகே அழகாபுரியில் சமூக விரோதிகளால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அழகாபுரியில் டீக்கடை, ஓட்டல், மளிகை, பெட்டிக்கடைகள் என 35க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. சுற்றியுள்ள பகுதியில் உள்ள 30 க்கும் மேற்பட்ட கிராமத்தினர் இங்கு வந்து செல்வர். இங்கு செவ்வாய்தோறும் சந்தையும் நடக்கிறது. இங்கு வரும் வெளியூர், வட மாநில இளைஞர்கள் அவ்வப்போது கடைகளில் சென்று பொருட்களை வாங்குவதும், ஓட்டல்களில் உணவு உண்பதும் பிறகு அங்கேயே அவர்களுக்குள், கடை உரிமையாளர்களிடம் வாக்குவாதம், அடிதடியில் ஈடுபடுவதும் வாடிக்கையாக உள்ளது. கூம்பூர் போலீசாரிடம் கூறினாலும் போதிய நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் கடை உரிமையாளர்கள் நேற்று கடையடைப்பு நடத்தினர்.
ஓட்டல் உரிமையாளர் எம்.பிரேம்குமார்: அழகாபுரியில் மாலை, இரவில் குடிமகன்களின் தொல்லை கூடுதலாக உள்ளது. ஓட்டல்களில் உணவு சாப்பிட்ட பின் அடிதடியில் இறங்குகின்றனர். கூம்பூர் போலீசாரிடம் கூறினாலும் நடவடிக்கை இல்லை. இங்கு நிரந்தரமாக கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும் என்றார்.