/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காட்டுப்பன்றி இறைச்சியை சமைத்த மூவர் கைது
/
காட்டுப்பன்றி இறைச்சியை சமைத்த மூவர் கைது
ADDED : டிச 20, 2024 03:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: கொடைக்கானலில் இறந்து கிடந்த காட்டு பன்றியை வனத்துறைக்கு தெரிவிக்காமல் சமைத்த மூவரை கொடைக்கானல் வனத்துறையினர் கைது செய்து அபராதம் விதித்தனர்.
கொடைக்கானல் இசிசி ரோடு, திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் கிருஷ்ணன் 65, செந்தில்குமார் 48, விஜயகுமார் 28. இவர்கள் இசிசி ரோடு பகுதியில் இறந்து கிடந்த காட்டுப்பன்றியை வனத்துறைக்கு தெரிவிக்காமல் சமைத்து சாப்பிட்டுள்ளனர். வன உயிரின சட்டப்படி மூவரையும் கைதுசெய்து தலா ரூ. 20 ஆயிரம்அபராதம் விதித்து வழக்கு பதிவு செய்தனர்.