/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பெட்ரோல் குண்டு வீசிய மூவர் கைது
/
பெட்ரோல் குண்டு வீசிய மூவர் கைது
ADDED : அக் 25, 2025 04:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாமிநாதபுரம்: பழநி சாமிநாதபுரம் அருகே ஜி.வி.ஜி., நகரில் பெட்ரோல் குண்டு வீசிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
பழநி சாமிநாதபுரம் ஜி.வி.ஜி., நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு மதுரையை சேர்ந்த ஹரிமணி 18, நண்பர்கள் முத்துக்குமார் 19, கவுதம் 19, வந்தனர்.
இவர்கள் போதையில் தகராறு செய்ய அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதில் மூவரும் ராமாத்தாள் 55, வீட்டில் பெட்ரோல் குண்டு வீசினர். உலகநாதன் கார் கண்ணாடி, வயலுார் பகுதி பேக்கரி கண்ணாடி உடைத்தனர். அதே பகுதி சீனிவாசனை தாக்கி விட்டு தப்பினர்.
இவர்களை சாமிநாதபுரம் போலீசார் கைது செய்தனர்

