/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கஞ்சா கடத்திய சிறுவன் உட்பட மூவர் கைது
/
கஞ்சா கடத்திய சிறுவன் உட்பட மூவர் கைது
ADDED : ஜன 05, 2026 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி: -சாணார்பட்டி அருகே விற்பனைக்காக பைக்கில் கஞ்சா கடத்திய 16 வயது சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாணார்பட்டி போலீஸ் எஸ்.ஐ., வேலுமணி தலைமையிலான போலீசார் கோபால்பட்டி அருகே வடுகபட்டி பிரிவு பகுதியில் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது டூவீலரில் விற்பனைக்காக கஞ்சா கடத்தி வந்த மஞ்சநாயக்கன்பட்டி தாமரைக்கண்ணன் 21, கோபால்பட்டி விளக்கு ரோடு முத்துக்குமார் 19, பதினாறு வயது சிறுவன் ஆகிய மூவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய டூவீலரை கைபற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.

