மளிகை கடைக்காரரை கொல்ல முயற்சி: மனைவி உட்பட மூவர் கைது
மளிகை கடைக்காரரை கொல்ல முயற்சி: மனைவி உட்பட மூவர் கைது
UPDATED : நவ 14, 2026 10:57 PM
ADDED : நவ 14, 2026 10:42 PM
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மளிகைக்கடை உரிமையாளரை கொல்ல முயன்றதாக அவரது மனைவி உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் திருமலைசாமிபுரம் மளிகைக்கடை உரிமையாளர் முத்துக்குமார் 39. இவரது மனைவி லாவண்யா 23. இரு நாட்களுக்கு முன்பு முத்துக்குமார் வீட்டில் இருந்தபோது அங்கு வந்த இருவர் அவரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர். படுகாயம் அடைந்த முத்துக்குமார் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரது புகாரில் திண்டுக்கல் வடக்கு போலீசார் வழக்குப் பதிந்து மனைவி லாவண்யா, அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தனர்.
அதில் லாவண்யாவுக்கும் எமக்கலாபுரத்தை சேர்ந்த துளசிமணி 25, என்பவருக்கும் தொடர்பு இருப்பதும், அதனை முத்துக்குமார் கண்டித்ததால் அவரை கொலை செய்ய திட்டமிட்டதும் தெரியவந்தது. அதன்படி துளசிமணி, தனது நண்பரான எமக்கலாபுரம் அழகுசின்னுவுடன் 45, முத்துக்குமாரின் வீட்டுக்கு சென்று தாக்கிவிட்டது தப்பியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், லாவண்யா உள்ளிட்ட மூவரையும் கைது செய்தனர்.
