/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
டாஸ்மாக் மோதலில் மூவருக்கு வெட்டு
/
டாஸ்மாக் மோதலில் மூவருக்கு வெட்டு
ADDED : ஜூலை 04, 2025 07:00 AM
எரியோடு; திண்டுக்கல் மாவட்டம் எரியோட்டில் டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட மோதல் முன்விரோதத்தில் மூவரை கும்பல் வெட்டியது. இதை கண்டித்து கிராம மக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
எரியோடு அய்யலுார் ரோட்டில் 'டாஸ்மாக்' மதுக்கடையும், பாரும் உள்ளன. ஜூன் 13 இரவு மது குடித்த எலப்பார்பட்டி, மீனாட்சிபுரம் இளைஞர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. மறுநாள் அதே பகுதியில் இரு தரப்பாக 20க்கும் மேற்பட்டோர் ஆயுதங்களுடன் மோதி கொண்டனர்.
எலப்பார்பட்டி ஸ்ரீதர் 20, காயமடைந்தார். மீனாட்சிபுரத்தை சேர்ந்த 8 பேரை எரியோடு போலீசார் கைது செய்தனர். அவர்கள் நிபந்தனை ஜாமின் பெற்று தினமும் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வந்தனர்.
நேற்று காலை அவர்கள் கையெழுத்திட சென்றபோது அ.தி.மு.க., அலுவலகம் அருகில் மறைந்திருந்த கும்பல் ஒன்று மீனாட்சிபுரம் மதன் 23, கருப்புசாமி 20, அருண்குமார் 20, ஆகியோரை வழி மறித்து வெட்டியது. காயமடைந்த மூவரும் திண்டுக்கல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதை கண்டித்து மீனாட்சிபுரம் மக்கள் எரியோட்டில் மறியல் போராட்டம் நடத்தினர். டி.எஸ்.பி., பவித்ரா பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தார். தப்பிய கும்பலை எரியோடு போலீசார் தேடுகின்றனர்.