ADDED : ஜன 24, 2025 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: செங்குறிச்சி ஆலம்பட்டியை சேர்ந்த பால் வேன் டிரைவர் பழனிச்சாமி 46. நேற்றுமுன்தினம் இரவு வடமதுரை சிட்டம்பட்டி அருகே டூவீலரில் சென்றபோது குன்னம்பட்டி நல்லாண்டவர் ஓட்டி வந்த டூவீலர் மோதிய விபத்தில் இறந்தார்.
புதுகொம்பேறிபட்டி கூலித்தொழிலாளி கணேசன் 60. அய்யலுார் எரியோடு ரோட்டில் சித்துவார்பட்டியில் டூவீலரில் சென்றபோது தடுமாறி விழுந்து இறந்தார்.
திருச்சி கருமண்டபம் அசோக் நகரை சேர்ந்த நாகராஜன் 57.
அய்யலுார் ஜி.குரும்பபட்டி உறவினர் வீட்டிற்கு முருகேசனுடன் மூக்கரபிள்ளையார் கோயில் பிரிவு பகுதியில் டூவீலரில் ஜன.15ல் சென்றபோது அடையாளம் தெரியாத டூவீலர் மோதிய விபத்தில் இருவரும் காயமடைந்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாகராஜன் நேற்று இறந்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

