UPDATED : நவ 21, 2026 09:18 PM
ADDED : நவ 21, 2026 09:16 PM
அ நிறம் | அளவு
நத்தம்:
நத்தம் இன்ஸ்பெக்டர் பொன்குணசேகரன், எஸ்.ஐ., மலைச்சாமி உள்ளிட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கூட்டுறவு வங்கி வீதி, அவுட்டர் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்த துவராபதியை சேர்ந்த ராஜேஷ் 40, சேர்வீடு புதுார் முருகேசன் 48, நத்தம் சுல்தான் அலாவுதீன் 40, ஆகிய மூவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆன்லைன் லாட்டரி சீட்டுக்கள், பறிமுதல் செய்யப்பட்டது.
