/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொள்ளை முயற்சி வழக்கில் மேலுாரைச் சேர்ந்த மூவர் கைது
/
கொள்ளை முயற்சி வழக்கில் மேலுாரைச் சேர்ந்த மூவர் கைது
கொள்ளை முயற்சி வழக்கில் மேலுாரைச் சேர்ந்த மூவர் கைது
கொள்ளை முயற்சி வழக்கில் மேலுாரைச் சேர்ந்த மூவர் கைது
ADDED : ஜூன் 20, 2025 01:20 AM

நத்தம்,:திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சமுத்திராபட்டி ரியல் எஸ்டேட் அதிபரின் வீட்டில் முகமூடி அணிந்து கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் மதுரை மேலுாரைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
சமுத்திராபட்டியை சேர்ந்தவர் அழகப்பன் 47. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் சிறுகுடி செல்லும் சாலை ஊரணிக்கரை பகுதி வீட்டில் தாய் சொர்ணத்துடன் 70, வசித்து வருகிறார்.
ஜூன் 16- இரவு வீட்டிற்குள் புகுந்த முகமூடி அணிந்த 6 பேர் கொண்ட கும்பல் அழகப்பனின் கழுத்தில் கத்தியை வைத்து பீரோவை திறக்க கூறினர். அதில் நகை, பணம் இல்லாததால் ஆத்திரமடைந்தவர்கள் கத்தியால் அவரின் கழுத்து, கை,கால்களில் சராமரியாக குத்திவிட்டு தப்பினர். நத்தம் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன், எஸ்.ஐ.,க்கள் கிருஷ்ணகுமார், தர்மர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடினர்.
சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததை தொடர்ந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக மதுரை மேலுார் பஸ் ஸ்டாண்ட் அருகில் பதுங்கி இருந்த அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன் 29, சாந்தகுமார் 28, முத்துவெங்கடாஜலபதி 29, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து காரையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். போலீசார் விசாரணையில் அழகப்பன் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் இருப்பதாக வந்த தகவலின்படி கொள்ளையடிக்க சென்றதாக கைதானவர்கள் கூறினர்.