/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தொழிலாளி அடித்து கொலை உறவினர்கள் மூவர் கைது
/
தொழிலாளி அடித்து கொலை உறவினர்கள் மூவர் கைது
ADDED : பிப் 06, 2025 02:26 AM
குஜிலியம்பாறை:திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை முத்தக்காபட்டியில், குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், கூலித்தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டம், கடவூர் மேட்டூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தங்கவேல், 55. குஜிலியம்பாறை லந்தக்கோட்டை முத்தக்காபட்டியில் உள்ள தங்கை சின்னப்பொண்ணு வீட்டிற்கு வந்திருந்தார்.
நேற்று முன்தினம் மாலை உறவினர்கள் சீரங்கன், கணேசன், பூமி ஆகியோருடன் சேர்ந்து தங்கவேல், கரூர் கானியாளம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தினார்.
அதில் தங்கவேலுவுக்கும், சீரங்கனுக்கும் குடிபோதையில் வாக்குவாதம் ஏற்பட்டது. பூமி, சீரங்கன், கணேசன் சேர்ந்து தங்கவேலை தாக்கினர். பின் மூவரும் காயமடைந்த தங்கவேலை, அவரது தங்கை வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டு சென்றனர். அங்கு சிறிது நேரத்தில் அவர் இறந்தார்.
தங்கவேலை, அடித்துக் கொன்றதாக சீரங்கன் உள்ளிட்ட மூவரையும் குஜிலியம்பாறை போலீசார் கைது செய்தனர்.