/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தகராறில் மூவருக்கு வெட்டு; வீடு சூறை
/
தகராறில் மூவருக்கு வெட்டு; வீடு சூறை
ADDED : ஆக 09, 2025 03:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: பெரியகோட்டை பில்லமநாயக்கன்பட்டி ராஜம்மாள் 46, ராஜகோபால் 41 குடும்பத்தினர் இடையே முன்விரோதம் உள்ளது.
அடிக்கடி தகராறு இருந்த நிலையில் நேற்றுமுன்தினம் மீண்டும் ஏற்பட்ட தகராறில் ராஜம்மாள், அவரது உறவினர்கள் பிரதீப், சதீஷ்குமாரை அரிவாளால் ராஜகோபாலின் மகன் கார்த்திகேயன், உறவினர் இனியன் வெட்டிவிட்டு தப்பி யோடினர்.
படுகாயமடைந்த 3 பேரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த ராஜம்மாள் தரப்பினர் ராஜகோபாலின் வீட்டிற்கு சென்று அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடி னர்.
இரு தரப்பு புகாரில் 9 பேர் மீது வடமதுரை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.